மழை தொடர்பில் பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
weather
today
srilnka
By Vasanth
இலங்கையின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு. வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.
சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையுடனான வானிலை நிலவக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது, இடியுடன் கூடிய மழைபெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொது மக்களை அவதானமாக செயல்படுமாறும் அத்திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி