வடக்கு கிழக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் இன்று முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த மழையுடனான காலநிலையானது எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நிலவுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் கனமழை
இந்தநிலையில், கடந்த சில வாரங்களாக வடக்கு கிழக்கில் பெய்த கனமழை காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதுடன் சில குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 1009 குடும்பங்களை சேர்ந்த 3120 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |