புதிய தாழமுக்கம் - வடக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை..! வெளியாகியுள்ள எச்சரிக்கை

Jaffna Sri Lanka Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Vanan Apr 22, 2023 11:09 AM GMT
Report
Courtesy: நாகமுத்து பிரதீபராஜா

இன்று முதல்(22.04.2023) எதிர்வரும் 10.05.2023 வரை அவ்வப்போது மதியத்துக்கு பின்னர் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இந்த மழை இடியுடன் கூடிய மழையாகவே இருக்கும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.

அதே வேளை, எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு தென் கிழக்கே தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. எனினும் இதனை தற்போது உறுதிப்படுத்த முடியாது என அவர் கூறுகிறார்.

நாட்டின் வானிலை தொடர்பில் இன்று பதிவொன்றை இட்டு இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளார்.

“வடக்கு மாகாணத்தின் மழை வீழ்ச்சியைத் தீர்மானிப்பதில் பல காரணிகள் பங்களிப்பு செய்கின்றன.

பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்பு

புதிய தாழமுக்கம் - வடக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை..! வெளியாகியுள்ள எச்சரிக்கை | Weather Today Sri Lanka Current Weather Climate

அதில் மொன்சூன் சுற்றோட்டம் ( Monsoon Circulation), வங்காள விரிகுடா கடற்பிரதேச வெப்பநிலையும் அமுக்க வேறுபாடுகள் ( Sea surface temperature and Atmospheric pressure variations), எல் நினோ தெற்கு அலைவு (El Nino Southern Oscillation- ENSO), மேடன் யூலியன் அலைவு( Maden Julion Oscillation-MJO) இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண் ( Indian Ocean Dipole- IOD), றொஸ்பி அலைகள் ( Rossby waves), கடல் தரைக் காற்றுக்கள் ( Land and Sea Breezes), மேற்காவுகைச் செயற்பாடுகள்(Convectional Process) போன்றன பங்களிப்பு செய்கின்றன.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து இன்று வரை (22.04.2023) 82 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியே எங்களுக்கு கிடைத்துள்ளது.

எங்களுக்கு மழையைத் தருவதில் மேடன் யூலியன் அலைவு முக்கியமானது. நீண்ட காலத்தின் பின் மேடன் யூலியன் அலைவு இந்து சமுத்திர பிராந்தியத்துக்கு வந்துள்ளது.

அத்துடன் றொஸ்பி அலைகளும் வருகை தந்துள்ளது.

இதன் காரணமாக இன்று முதல்(22.04.2023) எதிர்வரும் 10.05.2023 வரை அவ்வப்போது மதியத்துக்கு பின்னர் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தற்போது மிதமான வரட்சி(Mild Drought) நிலைமையே காணப்படுகின்றது.

தற்போது நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தன்னுடைய நீர் வழங்கல் பிரதேசங்களுக்கு போதுமான நீரை வழங்குவதில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

அவதானத்துடன் இருப்பது அவசியம்

புதிய தாழமுக்கம் - வடக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை..! வெளியாகியுள்ள எச்சரிக்கை | Weather Today Sri Lanka Current Weather Climate

எனவே எங்களுக்கு போதுமான அளவுக்கு மழைவீழ்ச்சி அவசியம். போதுமான மழைவீழ்ச்சி கிடைக்காது விட்டால் நாம் மிகப்பெரும் நெருக்கடியை எதிர்கொள்வோம்.

எனவே மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் போதுமான மழை கிடைக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.

அத்தோடு இக்காலப்பகுதியில் கிடைக்கும் மழை இடி மின்னல் நிகழ்வுடன் கூடிய மழை என்பதால் அது தொடர்பாக அவதானத்துடன் இருப்பது அவசியமாகும்” - எனத் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016