பானை போல் தொப்பையா... இதை மட்டும் செய்தால் போதும் உடனடி பலன்
பொதுவாக பொதுவாக அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் தொப்பை.
இந்த தொப்பையால் ஒருவருடைய கம்பீரமும் அழகும் இல்லாமல் போகின்றது. இதனால் அதிகமானோர் மனஉளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.
தொப்பை என்பது பொதுவாக வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான்.
அதோடு ஆண்களுக்கு மது அருந்துவதாலும் பானை போல் தொப்பை வருவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதற்கு முதலில் செய்ய வேண்டியது, துரித உணவுகளை தவிர்த்து தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான்.
போதிய அளவு தண்ணீர்
தினமும் தண்ணீர் போதிய அளவு குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.
மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.
அதேவேளை, உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
க்ரீன் டீ
அத்துடன், வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம் எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.
தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.
அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள். இவற்றை தினமும் செய்தால் தொப்பை விரைவில் குறைவடையும்


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்