தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வெற்றியாளருக்கு தென்னிலங்கையில் வரவேற்பு பேரணி- தமிழ் எம்.பி விடுத்துள்ள வலியுறுத்தல்!
தென்னிலங்கையின் தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என தனது டுவிட்டர் தளத்தின் ஊடாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் “ஒரு நாடு, இரண்டு சட்டம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெற்றியீட்டிய வெற்றியாளருக்கு வரவேற்பளிக்கும் பேரணியொன்று அஹுங்கல்ல பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வின் வீடியோவை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு, இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேரணியை தடுத்து நிறுத்துவதற்கு ஏன் பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணி தொடர்பில் பொலிஸார், சாணக்கியனிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட பின்னணியிலேயே அவர் இந்த டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.