தங்க ஜெர்சியுடன் களமிறங்கவுள்ள மேற்கிந்திய தீவு கிரிக்கெட் நட்சத்திரங்கள்
கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஜெர்சியை முன்னாள் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் அணிய உள்ளனர்.
2025 உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டியில் அவர்கள் இந்த ஜெர்சயை அணிந்து விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் சாம்பியன்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஜெர்சி, 18 காரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருப்பது தனித்துவமானது.
டி20 உலகக் கோப்பை
இந்த ஜெர்சி ஐக்கிய அரபு இராச்சியத்தின் அதி சொகுசு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இரண்டு முறை டி20 உலகக் கோப்பை வெற்றியாளர்களின் திறமை மற்றும் மரபுக்கு மரியாதை செலுத்தும் வகையில், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் போட்டியின் போது இந்த சிறப்பு தங்க முலாம் பூசப்பட்ட ஜெர்சி அணிந்து விளையாடவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், 2025 உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி நேற்று (18) ஆறு அணிகளின் பங்கேற்புடன் ஆரம்பமாகியது.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் முதல் போட்டி, பாகிஸ்தான் சாம்பியன்ஸ் மற்றும் இங்கிலாந்து சாம்பியன்ஸ் இடையே நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து தவிர, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
