இஸ்ரேலில் உருவாகியுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் : சில நேரங்களில் மரணம் ஏற்படலாம்!
"ப்ளோரனா "(Florana) என்று பெயரிடப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து டெல்டா, ஆல்பா, டெல்டா பிளஸ் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் பரவி வருகிறது. தற்போது ஒமைக்ரான் என்ற உருமாற்றம் அடைந்து உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இந்நிலையில், ப்ளோரனா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வைரஸ் இஸ்ரேலில் ஒருநபருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் மற்றும் ப்ளூவென்சா தொற்று ஆகிய இரண்டு தொற்றுகள் சேர்ந்து ’ப்ளோரனா’ என பெயரில் புதிய தொற்று உறுதியாகியுள்ளது.
பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு இந்த ப்ளோரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இந்த வைரஸ் தொற்றால் நிமோனியா ஏற்படலாம். மேலும், சில நேரங்களில் மரணமும் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.