அமெரிக்காவுக்கு கொடுத்தது உண்மையே - வெளிப்படையாக ஒப்புக்கொண்டது கோட்டாபய அரசாங்கம்
கெரவலப்பிட்டிய யுகதானவி மின்நிலையத்தில் உள்ள 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு கொடுத்தது உண்மைதான் என்றும் அவ்வாறு செய்வதில் எவ்வித தவறும் இல்லை என்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். '' எங்கள் தேர்தல் அறிக்கையை எடுத்துப் படியுங்கள். முக்கிய விஷயம் என்னவென்றால், சர்வதேச நிறுவனங்களுடன் ஒத்துழைக்க அரசாங்கமும் தனியார் துறையும் இணைந்து செயல்படுகின்றன.
பொதுத் தேர்தலுக்கு முன்பு நாங்கள் சொன்னது இதுதான். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் அண்மையில் அதைத்தான் செய்தது.
எனினும், பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும், உள்ளூர் வளங்கள் விற்கப்படுவதில்லை என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்த மின்நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்காவுக்கு அரசாங்கம் கையளித்த நிலையில் அரசுக்கு ஆதரவளிக்கும் 10 கட்சிகள் தமது எதிர்ப்பை கடுமையாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.