வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி
உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp)புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில்(status) பாடல்கள் வைத்துக்கொள்ளும் வகையில் புதிய வசதியை வெளியிட்டுள்ளது.
கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டு ஆதிக்கம் செலுத்தும் வாட்ஸ்அப் சமூக வலைத்தளம் தனது பயனர்களுக்காக புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.
புதிய அம்சம்
அந்த வகையில், வீடியோ கோல்(video call), ஓடியோ கோல்(Audio call), க்ரூப் வீடியோ கோல் என ஏராளமான வசதிகளைத் தந்த வாட்ஸ்அப் நிறுவனம் இன்ஸ்டாகிராம் போன்று வாட்ஸ்அப் ஸ்டேட்டசிலும் பாடல்களைப் பதிவிடும் வகையில் புதிய வசதியை தந்துள்ளது.
இந்நிலையில், இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப் பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இது போன்று வாட்ஸ்அப் பயனர்களுக்கு தேவையான பல வசதிகளை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் தயாராகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
