விடுதலைப் புலிகளின் ஆயுத கிடங்கு : தோண்டிய காவல்துறைக்கு ஏமாற்றம்
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka Police Investigation
By Shadhu Shanker
சம்பூரில் விடுதலைப் புலிகளின் ஆயுத கிடங்கு என தோண்டப்பட்ட போது எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அகழ்வுபணியானது இன்று(14))இடம் பெற்றது.
திருகோணமலை சம்பூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் சம்பூர் காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டது.
அகழ்வுபணி
மூதூர் நீதிமன்ற பதில் நீதவான் தலைமையில் இவ் அகழ்வுப் பணி திருகோணமலை தடயவியல் காவல்துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த பகுதியில் சுமார் 12 அடி தோண்டப்பட்ட நிலையில் எதுவும் கிடைக்கவில்லை மீண்டும் இயந்திரத்தை கொண்டு குறித்த கிடங்கை மூடியதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்