பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்? வெளிவந்த அறிவிப்பு
எதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதியில் பாடசாலைகளை மீண்டும் திறக்கும் திட்டம் உள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் எல்.கே. எம். டி. தர்மசேன தெரிவித்தார்.
ஊடகமொன்றின் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உயர்தர மாணவர்கள், க.பொ.த சாதாரண தர மாணவர்கள் மற்றும் புலமைப்பரிசில் மாணவர்களை முதலில் பாடசாலைக்கு தயார்படுத்துவதே எங்கள் நம்பிக்கை. அது ஒக்டோபர் நடுப்பகுதியில் இருக்கும் என்ற எண்ணம் எங்களுக்கு இருக்கிறது. அந்த முடிவை உறுதியாக சொல்ல முடியாது.
எதிர்காலத்தில் சுகாதார வழிகாட்டுதல்களின்படி நாங்கள் ஒரு திட்டத்தை உருவாக்குவோம். குறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், கொவிட் தொற்றின் பரவல் மற்றும் தீவிரத்தைப் பொறுத்தே பாடசாலைகளை திறக்கும் திட்டம் தீர்மானிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.