கறுப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு எது தெரியுமா...!
பால் என்றாலே நமக்கு உடனே ஞாபகத்திற்கு வருவது வெள்ளைப்பாலைத்தான். ஆனால் இந்த உலகில் உள்ள ஒரேயொரு விலங்கு மட்டுமே கறுப்பு நிறத்தில் பாலைத் தருகிறது என்றால் நீங்கள்நம்பவா போகின்றீர்கள். ஆனால் அதுதான் உண்மை.
மனிதர்களின் வாழ்க்கையில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை பாலை தங்களது அன்றாட வாழ்வில் உட்கொள்கின்றனர்.
ஏனென்றால் ஊட்டச்சத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் பால் மிகவும் அவசியம்.
கருப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு
உலகில் சுமார் 6,400 பாலூட்டிகள் உள்ளதாக கூறப்படுகிறது அந்த வகையில் கருப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு கருப்பு காண்டாமிருகம் தான். இவை ஆபிரிக்க கருப்பு காண்டாமிருகம் என அழைக்கப்படுகின்றன.
இந்த வகை காண்டாமிருகங்களின் பாலில் 0.2 சதவீதம் மட்டுமே கொழுப்பு உள்ளது. தண்ணீர் போல இருக்கும் காண்டாமிருகத்தின் பால் கருப்பு நிறத்தில் இருக்கும்.
ஒரு முறை ஒரு குட்டியை மட்டுமே ஈனும்
கருப்பு காண்டாமிருகங்களால் 4 முதல் 5 வயது வரை மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடியும். அவை ஒரு வருடத்திற்கும் மேலாக கர்ப்பமாக இருக்கும். இவை ஒரு முறை ஒரு குட்டியை மட்டுமே ஈனும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |