விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜனநாயகன் படப் பிரச்சினை, சிபிஐ விசாரணை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை விஜய் சந்தித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கட்சி பதிவு
தவெக தலைவர் விஜய் தலைமையில் கட்சி பதிவு செய்யப்பட்ட பிறகு, தேர்தல் ஆணையத்திடம் சின்னம் கோரப்பட்டது.
ஆட்டோ, விசில் மற்றும் கிரிக்கெட் மட்டை ஆகிய 3 சின்னங்களை கோரி தவெக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.
பல்வேறு கட்சிகளின் சின்ன கோரிக்கைகளை ஆய்வு செய்த பிறகு, விசில் சின்னம் தவெகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விசில் சின்னம்
விசில் சின்னம் தமிழகத்தில் முன்பு வேறு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், தற்போது காலியாக இருந்ததால் தவெகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தவெகவின் இந்த சின்ன ஒதுக்கீடு கட்சியின் தேர்தல் பயணத்திற்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
விசில் சின்னம் தமிழகத்தில் மக்களிடையே பரவலாக அறியப்பட்ட சின்னம் என்பதால், வாக்காளர்களிடம் எளிதில் அடையாளம் காணப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |