போப்பாண்டவராக முதன்முறையாக அமெரிக்கர்: அறிவிக்கப்பட்டது பெயர்..!
புதிய இணைப்பு
தெரிவு செய்யபப்பட்ட புதிய போப்பாண்டவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, புதிய போப் அமெரிக்கரான லியோ XIV என்றழைக்கப்படும் ரொபர்ட் பிரீவோஸ்ட் (Robert Prevost) என வத்திக்கான் அறிவித்துள்ளது.
இவர் வரலாற்றிலேயே முதல் முறையாக தெரிவு செய்யபப்பட்ட அமெரிக்க போப்பாண்டவர் ஆவார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோவில் பிறந்த போப்பாண்டவர், தற்போது செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தை நோக்கிய மாடியில் தோன்றி தனது முதல் உரையை நிகழ்த்த ஆரம்பித்துள்ளார்.
🚨𝐁𝐑𝐄𝐀𝐊𝐈𝐍𝐆:
— Oli London (@OliLondonTV) May 8, 2025
American born Cardinal Robert Francis Prevost stands on the St Peter’s balcony
after being named the new pope.
Pope Leo XIV, born in Chicago, has become the first ever American Pope pic.twitter.com/EpOnwSYUGo
முதலாம் இணைப்பு
உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு இன்று முடிவடைந்துள்ளதுடன், வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலய புகைபோக்கியில் இருந்து வெள்ளைப்புகை வெளியாகியுள்ளது.
வெளியான வெள்ளைப்புகை சமிஞ்சையின் படி, கரதினால்கள் போப் பிரான்சிஸுக்குப் பிறகு ஒரு வாரிசைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது உறுயாகியுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் என தெரியப்படுத்தபடாத நிலையில், புதிய போப்பாண்டவர் அடுத்த ஒரு மணி நேரத்தில் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தை நோக்கிய மாடியில் தோன்றுவார்.
அறிவிப்பு
தற்போது, புதிய போப் சிஸ்டைன் தேவாலயத்திற்கு அடுத்துள்ள ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வெள்ளை போப்பாண்டவர் அங்கிகளை அணிவார் என தெரிவிக்கப்படுகிறது.
I pray the new Pope isn't a Jesuit. pic.twitter.com/HF38yS6hAU
— Baseball Hut (@TheBaseballHut) May 8, 2025
இதேவேளை, சிரேஷ்ட கர்தினால் விரைவில் "ஹேபமஸ் பாப்பம்" (லத்தீன் மொழியில்) எங்களுக்கு ஒரு போப் இருக்கிறார் என்ற வார்த்தைகளுடன் முடிவை உறுதிப்படுத்துவார்.
அதனை தொடர்ந்து, புதிய போப்பாண்டவரை அவர் தேர்ந்தெடுத்த போப்பாண்டவர் பெயரால் அறிமுகப்படுத்துவார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
