காசாவின் உண்மையான ‘ஹீரோக்கள்’ யார்..!

Israel Israel-Hamas War Gaza
By Sumithiran Nov 08, 2023 11:54 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

"காசா நிவாரண முகாம்களில் தங்கி பணியாற்றும் சக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தாங்கள் இறக்கப் போகிறோம் என்று தெரிந்தும், அந்த இடத்தில் தங்கி பணியாற்றுகிறார்கள். மக்களுக்காகச் சேவை செய்கின்றனர். அவர்கள்தான் நிஜமான ஹீரோக்கள்”.

இவ்வாறு தெரிவித்தார் காசா நிவாரண முகாம்களில் பணிபுரிந்துவிட்டு கடந்த வாரம் அமெரிக்காவுக்குத் திரும்பிய செவிலியரான எமிலி கலாஹான்.

தனது சக ஊழியர்கள் குறித்தும், தன்னுடைய பணி அனுபவம் குறித்தும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் உருக்கமாக தெரிவித்தவை வருமாறு,

ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு : வெளிப்படையாக அறிவித்த அரச தலைவர்

ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு : வெளிப்படையாக அறிவித்த அரச தலைவர்

 பாதுகாப்பான இடம் என எதுவுமே இல்லை

காசாவில் பாதுகாப்பான இடம் என்று ஒன்றுகூட கிடையாது. எங்களைச் சுற்றிலும் குண்டுகள் வெடித்தன. என்னுடன் பணியாற்றிய சில சக ஊழியர்கள் ஒரு நொடி கூட மக்களை விட்டு வெளியேறவில்லை.

காசாவின் உண்மையான ‘ஹீரோக்கள்’ யார்..! | Who Are The Real Heroes Of Gaza

சில நாட்கள் கம்யூனிஸ்ட் பயிற்சி மையத்திலிருந்தோம். அங்கு சுமார் 35,000 பேர் இருந்தனர். அங்கிருந்த குழந்தைகளின் முகம், கழுத்து, கைகால் முழுவதும் காயங்கள் காணப்பட்டன. மருத்துவமனைகள் நிரம்பி இருந்ததால், அவர்கள் சிகிச்சை பெறாமல் அங்கேயே இருந்தனர்.

இஸ்ரேல் படைகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : ஹமாஸ் வெளியிட்ட காணொளி

இஸ்ரேல் படைகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : ஹமாஸ் வெளியிட்ட காணொளி

சக ஊழியர் கொல்லப்பட்டார்

50,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியிருந்த ஒரு முகாமில் நான்கு கழிவறைகள் மட்டுமே இருந்தன. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் தண்ணீர் விநியோகிக்கின்றனர். மருத்துவமனைக்கு வெளியே உள்ள ஒரு அம்புலன்ஸ் வெடித்ததில் என்னுடைய சக ஊழியர் கொல்லப்பட்டார்.

காசாவின் உண்மையான ‘ஹீரோக்கள்’ யார்..! | Who Are The Real Heroes Of Gaza

ஆச்சரியமளித்த பதில்

காசாவை விட்டு வெளியேறுவதற்கான உத்தரவு வந்தபோது, நான் என்னுடைய சக ஊழியர்களுக்கு ‘என்னுடன் யாராவது வருகிறீர்களா’ என்று கேட்டு குறுஞ்செய்தி அனுப்பினேன். ஆனால் எனக்குக் கிடைத்த ஒரே பதில், ‘இது எங்கள் சமூகம். இது எங்கள் குடும்பம். இவர்கள் எங்கள் நண்பர்கள்... அவர்கள் எங்களைக் கொல்லப் போகிறார்களானால், எங்களால் முடிந்தவரை பலரைக் காப்பாற்றிவிட்டு நாங்கள் இறக்கப் போகிறோம்” என்று கூறினார்கள்.

காசாவின் உண்மையான ‘ஹீரோக்கள்’ யார்..! | Who Are The Real Heroes Of Gaza

அவர்களின் பதில் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இப்போது நான் என்னுடைய சக ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு நாளும் கவலைப்படுகிறேன். நான் தினமும் காலையிலும், இரவிலும் என்னுடைய சக ஊழியர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறேன், 'நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா?' என்று கேட்கிறேன்.


இதயம் காசாவில்தான்

26 நாட்களுக்குப் பிறகு என்னுடைய குடும்பத்தாருடன் நேரம் செலவிடுகிறேன். இப்போதுதான் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் உணர்கிறேன்.

காசாவின் உண்மையான ‘ஹீரோக்கள்’ யார்..! | Who Are The Real Heroes Of Gaza

ஆனால், என்னுடைய இதயம் காசாவில்தான் உள்ளது. அது காசாவிலேயே இருக்கும். நான் பணியாற்றிய பாலஸ்தீனிய மக்கள் என் வாழ்க்கையில் நான் சந்தித்த நம்பமுடியாத மனிதர்களில் சிலர்” என்றார் கண்களில் தேங்கிய கண்ணீருடன்.

சீனாவிற்கு வைக்கப்படும் கடிவாளம் : அமெரிக்க பின்னணியில் கொழும்பில் காலூன்றுகிறார் அதானி

சீனாவிற்கு வைக்கப்படும் கடிவாளம் : அமெரிக்க பின்னணியில் கொழும்பில் காலூன்றுகிறார் அதானி

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025