ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு : வெளிப்படையாக அறிவித்த அரச தலைவர்
United States of America
Malaysia
Israel-Hamas War
By Sumithiran
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு என்பதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. "மலேசிய மக்கள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஒருங்கிணைந்து ஆதரவளிக்க வேண்டும் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
மக்களுக்காக போராடிவரும் ஹமாஸ்
இனவெறியை எதிர்த்து ஆபிரிக்க மக்களுக்காக போராடிய நெல்சன் மண்டேலாவை போல் ஹமாஸ் அமைப்பினர் தங்கள் மக்களுக்காக போராடி வருகின்றனர்.
அமெரிக்கா எனும் தனிநாடு கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கோ, அச்சுறுத்தலுக்கோ நான் அஞ்சப் போவதில்லை.
ஐ.நாவின் முடிவையே அங்கீகரிப்போம்
ஐக்கிய நாடுகள் சபை எடுக்கும் முடிவுகளைத்தான் நாங்கள் அங்கீகரிப்போம் என திட்டவட்டமாக அறிவித்தார்.
காசாவின் மீதான் இஸ்ரேல் தாக்குதலை "காட்டுமிராண்டித்தனம்" என அன்வர் சில தினங்களுக்கு முன் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி