உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள பிக் பொஸ் யார் ....நிசாம் காரியப்பர் கேள்வி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள பிக் பொஸ் யார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் (Nizam Kariapper) கேள்வி எழுப்பியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று (23) கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ''இராணுவத்தின் முழு அதிகாரத்தை பயன்படுத்தி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள கள்வர்களுக்கும், இந்த பயங்கரவாதத்தை திட்டமிட்டவர்களுக்கும் பின்னணியில் இருந்து செயற்பட்ட அந்த பிக் பொஸ் யார்.
இது சாதாரண பயங்கரவாதம் அல்ல. திட்டமிட்ட, அமைப்புச்சார்ந்த தாக்குதலாக இது நடந்துள்ளது. அதன் பின்னணியில் இருந்து செயற்பட்டவரைக் கண்டறிய விசாரணை நடத்த வேண்டும்.
பிக் பொஸ் என்றால் அவர் ஒளிந்திருந்து வேலைகளைச் செய்பவர் ” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
