உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி யார்..! விரைவில் அம்பலமாக்கவுள்ள பிரபலம்
ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரி யார் என்பதை தாம் அறிவதாகவும், ஜனாதிபதி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவிப்பதாகவும் பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் (galagoda aththe gnanasara thero)தெரிவித்துள்ளார்.
இன்று (6) காலை கண்டியில்(kandy) உள்ள மல்வத்த மற்றும் அஸ்கிரி மகாநாயக்கர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வணக்கத்திற்குரிய தேரர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்,,து தெடார்பாக கூறுகையில்,
தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவரைத் தெரியும்
"நான் இதை பொறுப்புடன் சொல்கிறேன். எனக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவரைத் தெரியும். ஆனால் நான் ஊடகங்களுக்குச் சொல்லவில்லை. நான் நாட்டின் ஜனாதிபதிக்கு மற்றும் பாதுகாப்புப் பொறுப்பில் உள்ளவர்களுக்குச் சொல்வேன்." எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 2 நாட்கள் முன்
