கச்சத்தீவு யாருக்கு சொந்தம்... அமைச்சர் டக்ளஸ் விளக்கம்
கச்சத்தீவு எந்த நாட்டுக்கு சொந்தமானது என்று இரண்டு தரப்புகளும் வெவ்வேறு கருத்துக்களை கூறிவருகிறது, இதில் எது சரியானது என்பதை ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்று (04) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது கச்சதீவு விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தேர்தல் காலங்களில்
"இலங்கைத் தரப்பினால் கச்சதீவு தங்களுக்கு சொந்தம் என்று கூறுகின்றனர் அதேபோல் இந்தியாவின் தரப்பிலும் அவர்களுக்குரியது என்று கூறப்படுகின்றது.
தற்போது இந்தியாவில் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளது, இந்த வேளையிலே தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் வாக்குகளை பெற்றுக்கொள்ள அரசியல் தரப்பினரினால் கரமேந்தப்பட்டுள்ள ஆயுதமாக தற்போது கச்சதீவு அமைந்துவிட்டது.
இது தேர்தல் காலங்களில் பொதுவானதொன்று தான் இவ்வாறான கோஷங்கள் வந்துக்கொண்டுதான் இருக்கும் அதனை மாற்ற முடியாது.
தொழில் செய்யலாம்
கடந்த 1974ஆம் ஆண்டு கச்சதீவு தொடர்பாக இலங்கை அரசுக்கும் இந்தியா அரசுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின் படி இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கையிலும் இலங்கை கடற்தொழிலாளர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் சென்று தொழில் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தவிரவும் அந்த ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு இலங்கைக்கே வழங்கிவைக்கப்பட்டது, இதனால் எந்த விவாதமும் அவசியமற்றது." என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |