2022ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்பதே WHOவின் இலக்கு!
2022ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் ஒவ்வொரு நாட்டு மக்களிலும் 70 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் நேற்று ஜெனிவாவில் வைத்து இந்த தகவலை வெளியிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
2021ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தபட்சம் 40 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை இலக்காக வைத்துள்ளோம்.
இதைத் தொடர்ந்து 2022ம் ஆண்டுக்குள் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டு மக்களிலும் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு வைத்துள்ளம் என்றார்.
இதற்கு அடைவதற்கு அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஒத்துழைக்க வேண்டும்
. இந்த இலக்கை அடைவதற்கு குறைந்தபட்சம் 1,100 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படும். உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒருபகுதி முழுமையாக தடுப்பூசி செலுத்திவிட்டனர்.
செப்டம்பர் இறுதிக்குள் உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு வைத்திருந்தோம் ஆனால், 56 நாடுகளால் இதை நிறைவேற்றமுடியவில்லை.
சமூக பொருளாதார நடவடிக்கைகள், மூலம் புதிய உருமாற்ற வைரஸ் வரலாமல் தடுக்க முடியும். தடுப்பூசி உலக மக்களுக்கு பரவலாகக் கிடைக்க ஜி20 நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று டெட்ராஸ் அதானம் தெரிவித்தார்.