மஹிந்தவின் உறவுக்காரர் தமிழரை திருமணம் முடித்தது ஏன்? அநுரகுமார வெளியிட்ட தகவல்
நிருபமா ராஜபக்ஸ (Nirupama Rajapaksa) மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் (T.Nadesan) தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) கடந்த 2017 ஆம் ஆண்டு தெரிவித்த கருத்துக்கள் இலங்கையின் சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்து வருகின்றது.
பசில் ராஜபக்சவின் சொத்துக்களை பாதுகாப்பவராக நடேசன் செயற்படுகின்ற விடயம், அரசாங்கத்தின் உயர் பீடத்திற்கும் நடேசனுக்கும் இடையிலான தொடர்பு மற்றும் அவரது வங்கிக் கணக்கில் காணப்படும் கோடிக்கணக்கான பணம் உள்ளிட்ட பல விடயங்களை அநுர குமார திசாயக்க தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் சுட்டிக்காட்டிய அவர்,
“இனவாதம் இருக்கும் என்றால், மஹிந்தவின் உறவுக்கார சகோதரி நிருபமா ராஜபக்ச திருமணம் முடித்து யாரை? தி. நடேசனை என்பவரை திருமணம் முடித்தார்.
பசில் ராஜபக்சவின் பணம் நடேசனிடமே உள்ளது. இதனை வெளிப்படையாகே கூற வேண்டும். நான் ஊடகங்களுக்கு முன்பாகவே இதனை கூறுகின்றேன்.
நடேசனின் வங்கி கணக்கை காட்டுங்கள், சொத்து மதிப்பை காட்டுங்கள். மல்வானையில் உள்ள பசில் ராஜபக்சவின் பெரிய வீட்டின் உறுதிப்பத்திரம் நடேசனின் பெயரிலேயே உள்ளது. பசிலின் சொத்துக்களை பாதுகாக்க நம்பிக்கைக்குரியவர் தமிழர் ஒருவரே.
ஜனவரி மாதம் 9ஆம் திகதி அதிகாலை 3 மணிக்கு ரணில் விக்ரமசிங்க மஹிந்த ராஜபக்சவை சந்திக்க அலரி மாளிகைக்கு சென்றார். அவர் யாருடன் சென்றார்? நான் நாடாளுமன்றில் வைத்து அவரிடம் கேட்டேன், நீங்கள் அன்று அதிகாலை 3 மணிக்கு மஹிந்த ராஜபக்சவை சந்திக்க நடேசனுடன் தானே சென்றீர்கள் எனக் கேட்டேன்.
அதற்கு அவர் இல்லை 2 கார்களில் சென்றதாக கூறினார்.
அதிகாரத்தை மாற்றிக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைக்குக் கூட நடேசனுடன்தான் செல்கின்றார்கள். அவர்களிடம் இனவாதம் இல்லை. அவர்கள் ஒன்றாகவே இருக்கின்றார்கள்” என்றார்.