அரசுடன் இணைய மாட்டோம் - காரணத்தை விளக்கிய சஜித்
நம்பிக்கை அழிப்பு
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து செயற்படுவோம் என்ற எதிர்பார்ப்பு அதிபர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் அழிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசகுற்றம் சாட்டியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், சந்தர்ப்பவாத ஆட்சியில் தமது கட்சி பங்கேற்காது என தெரிவித்தார்.
தற்போதைய இடைக்கால அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்படாது என தெரிவித்த அவர், எதிர்க்கட்சியில் தொடர்ந்தும் இருந்து தேசத்தை கட்டியெழுப்ப அனைத்து ஆதரவையும் கட்சி வழங்கும் எனவும் தெரிவித்தார்.
அமைதியான ஆர்ப்பாட்டகாரர்கள் மீது தாக்குதல்
ஒன்றிணைந்து செயற்படுமாறு அதிபர் விடுத்த அழைப்பை எதிர்க்கட்சிகள் பரிசீலித்து வரும் வேளையில், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நள்ளிரவில் ஆயுதப்படையினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு அரசாங்கத்தின் உண்மையான நோக்கங்களை அவர்களின் ஆட்சிப் பாதையில் வெளிப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
