புலிகளுடனான சண்டைகளில் எதற்காக சீக்கியர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள்

Sri Lanka Army Tamils Indian Army Liberation Tigers of Tamil Eelam Indian Peace Keeping Force
By Niraj David Feb 18, 2024 09:53 AM GMT
Niraj David

Niraj David

in சமூகம்
Report

இந்திய இராணுவத்தின் உயரதிகாரி லெப். கேணல் திபீந்தர் சிங்கை பீ.பீ.சி. யின் பிரபல ஊடகவியலாளரான மார்க் ரூலி செவ்வி கண்டுகொண்டிருந்தார்.

அந்தச் செவ்வியின் இடைநடுவே பீ.பீ.சி. ஊடகவியலாளர் மார்க் ரூலி அந்தச் செவ்வியை ஒலிப்பதிவு செய்துகொண்டிருந்த உபகரணத்தின் ஒலிவாங்கியை துண்டித்துவிட்டு, ஒரு கேள்வியை திபீந்தர் சிங்கிடம் தனிப்பட்ட ரீதியில் வினவினார்.

“இலங்கையில் இந்தியா மேற்கொண்டுவரும் சண்டைகளில் சீக்கியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுவது ஏன்? என்று அந்த பீ.பீ.சி. ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.

திபீந்தர் சிங்கிற்கு என்ன பதில் கூறுவது என்று புரியவில்லை. திகைத்து விட்டார். தடுமாறியபடி ஒருபதிலைக் கூறிச் சமாளிக்க முயன்றார்.

“உண்மையிலேயே நீங்கள் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கும் வரைக்கும் இதுபற்றி நாங்கள் யோசிக்கவேயில்லை. இது திட்டமிட்டு நடைபெற்ற ஒன்றல்ல.

இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்தியப் படை அணிகளில் சீக்கியர்கள் அதிகமாக இருப்பது உண்மைதான். ஆனால் இது தற்செயலான ஒன்று என்று கூறி அவர் மழுப்பிவிட்டார்.

அவரது பதிலை அந்த ஊடகவியலாளர் நம்பினாரோ தெரியவில்லை, வேறு கேள்வி எதுவும் கேட்கவில்லை. செவ்வியை முடித்துக்கொண்டு புறப்பட்டார்.

காரணம் என்ன

உண்மையிலேயே இலங்கையில் இந்தியப் படையினர் மேற்கொண்ட யுத்த நடவடிக்கைகளில் சீக்கியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டதற்கு ஏதாவது உள்நோக்கம் இருக்கின்றதா? “அப்படி எதுவுமே கிடையாது – என்று இந்திய அதிகாரிகள் என்னதான் சப்பைக்கட்டு கட்டினாலும், காரணத்துடன்தான் சீக்கியர்கள் ஈழ யுத்தத்தில் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதை உறுதியாகவே நம்பலாம்.

ஈழத்தில் அதிக அளவிலான படுகொலைகளையும், கொள்ளைகளையும், பாலியல் வல்லுறவுகளையும் மேற்கொண்டவர்கள் சீக்கியர்களே என்ற அடிப்படையில், இந்தியப் படை காலத்தில் ஈழ மண்ணில் அதிக அளவிலான சீக்கியர்களின் பிரசன்னம் பற்றி ஆராய்வது அவசியமாகின்றது.

இந்தியாவில் வீர தீர சாகாசங்களில் சீக்கியர்கள் கைதேர்ந்தவர்கள் என்பது பொதுவானதொரு அபிப்பிராயம். சீக்கியர்கள் பௌதீக ரீதியாக மிகுந்த உடல் பலத்தைக் கொண்டவர்கள் என்பது ஓரளவு உண்மையும் கூட. இந்தியாவில் பிரித்தானியர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் அதிக பங்களிப்பைச் செய்து, பலத்த இழப்புக்களைச் சந்தித்த சமூகம் என்ற வகையில் சீக்கியச் சமுகம் இந்தியாவில் மதிக்கப்படுகின்ற ஒரு சமூகம்.

இந்திய இராணுவத்திலும், விளையாட்டுக்கள் மற்றும் உடற் பலம் சார்ந்த விடயங்களிலும் சீக்கியர்கள் அதிகம் அங்கம் வகிப்பது வழக்கம். அதேவேளை, இந்தியாவில் உள்ள மற்றய இனங்களுடன் ஒப்பிடும் பொழுது, சீக்கியர்கள் அவ்வளவு புத்திசாலிகள் இல்லை என்பது இந்தியாவில் பரவலாக பேசப்படுகின்ற ஒரு விடயம்.

indian army india

சீக்கியர்கள் முட்டாள்கள், மிகுந்த முட்டாள் தனமான காரியங்களையே செய்பவர்கள் என்பது இந்தியாவில் உள்ள மற்ற இனங்களின் மத்தியில் காணப்படுகின்ற பரவலான நம்பிக்கை.

சீக்கியர்களின் முட்டாள்தனமான காரியங்களை அடிப்படையாக வைத்து, ‘சர்தாஜி ஜோக்ஸ் என்று ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகள் வெளிவந்து, உலகம் முழுவதும் பிரபல்யமாகி உள்ளன. (சீக்கியர்களை இந்தியில் ‘சர்தாஜிக்கள் என்றும் அழைப்பார்கள்). வீரம் மிக்க முட்டாள்களான சீக்கியர்கள் இந்தியப் படையில் அதிகம் இடம்பெற்றிருந்ததுடன், ஈழ மண்ணில் இந்தியப் படையினர் மேற்கொண்ட முட்டாள்தனமான நடவடிக்கைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது ஒன்றும் வியப்பான ஒரு விடயம் அல்ல.

‘இலங்கையில் இந்தியப் படையினர் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லாமல் சண்டையிட்டார்கள் என்பதே,- ஈழத்தில் இந்தியாவிற்கு ஏற்பட்ட தோல்விக்கு அடிப்படையான காரணமாக இன்றுவரை அனைவரும் குற்றம் சாட்டி வருகின்றார்கள்.

அப்படி எந்தவித அடிப்படை அரசியல் நோக்கமும் இல்லாது, அல்லது தமக்கிருந்த உண்மையான அரசியல் நோக்கத்தை வெளியிடாமல் யுத்தம் ஒன்றைப் புரிவதற்கு, அதுவும் அந்த யுத்தத்தை மிகவும் மூர்க்கமாகப் புரிவதற்கு சீக்கியர்களைப் போன்ற வீரம் நிறைந்த முட்டாள்கள் இந்தியத் தலைமைக்கு பொருத்தமாகப்பட்டார்கள்.

ஈழ யுத்தத்தில் சீக்கியர்களை அதிக அளவில் இந்தியத் தலைமை ஈடுபடுத்தியதற்கு இதுவும் ஒரு காரணம். அக்காலத்தில் இந்தியாவைப் பொறுத்தவரையில் எந்தவிதமான யுத்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை. எல்லைப்புறச் சண்டைகளிலும் இந்தியா ஈடுபட்டிருக்கவில்லை.

அதனால் மெட்ராஸ் ரெஜிமெட் உட்பட தென் இந்தியப் படையணிகள் பெருமளவில் எந்தவித பணியும் இல்லாது சும்மாவே அப்பொழுது காலம் கடத்தி வந்தன. இந்தியத் தலைமை நினைத்திருந்தால் தமிழ் பேசும் மெட்ராஸ் ரெஜிமெட் வீரர்களையே முற்று முழுதாக இலங்கை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியிருக்க முடியும்.

தாம் செய்யும் பிழையான காரியங்களை தமிழ் பேசும் இந்தியப் படையினரால் இலகுவாக விளங்கிக்கொண்டுவிட முடியும் என்ற காரணத்தினால், திட்டமிட்டே தமிழ் படையினர் நடவடிக்கைகளில் இருந்து தவிர்க்கப்பட்டு, பாஷை புரியாத, உணர்ச்சிகள் புரியாத வெறும் வீரத்தை மட்டுமே வெளிக்காட்டக்கூடிய சீக்கிய முட்டாள்களை இந்தியப் படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியது இதனால்தான்.

சீக்கியர்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள்

அதைவிட, தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தில் சீக்கியர்களை நேரடியாக ஈடுபடுத்தியதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உள்ளன. ஈழத்தில் இந்தியப்படைகள் பிரசன்னமாவதற்கு சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னதாக, இந்தியாவில் சீக்கிய சமூகத்திற்கு எதிராக பாரிய அடக்குமுறை ஒன்று கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது.

சீக்கியர்கள் காலிஸ்தான் என்ற தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்து அப்பொழுது ஆயுதப் போராட்டத்தில் குதித்திருந்தார்கள். இந்திரா காந்தி தலைமையிலான இந்திய நடுவன் அரசு, இரும்புக்கரம் கொண்டு அதனை அடக்கியிருந்தது. சீக்கியர்களின் அதிஉன்னத மதஸ்தலமான பொற்கோவிலினுள் இந்தியப் படை நுழைந்து பாரிய அனர்த்தங்களைப் புரிந்திருந்தது. ஷபுளுஸ்டார் இராணுவ நடவடிக்கை| என்ற பெயரில் இந்தியப் படையினர் மேற்கொண்ட மிகப் பிரமாண்டமான இராணுவ நடவடிக்கையின்போது, சீக்கியர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

சீக்கிய விடுதலைப் போராட்டத்தை முன்நின்று நடாத்திய பிரிந்தவால் என்ற தீவிரவாதத் தலைவரை, சீக்கிய பொற்கோயிலில் வைத்தே இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றது.

இது சீக்கியர்கள் மத்தியில் மாறாத வடுவை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பிரதம மந்திரி இந்திரா காந்தி அவரது பிரத்தியோக மெய்ப்பாதுகாவலர்களான இரண்டு சீக்கியர்களினாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

ltte war srilanka

இந்திரா காந்தியின் கொலையைத் தொடர்ந்தும் சீக்கிய சமூகம் இந்தியாவில் பாரிய அழிவுகளை எதிர்கொண்டது. இந்திரா காந்தியின் கொலையால் கோபம் கொண்ட இந்தியர்கள், ஆயிரக்கணக்கில் சீக்கிய மக்களை நாடு முழுவதிலும் கொலை செய்தார்கள். அவர்களது உடமைகளை சூறையாடினார்கள்.

மறைக்கப்பட்ட உண்மை

சீக்கியர்களுக்குச் சொந்தமான வியாபார ஸ்தலங்களை அழித்தார்கள். இது போன்று இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த சீக்கியர்களுக்கு எதிரான தொடர் அசம்பாவிதங்கள், இந்திய இராணுவத்தில் இருந்த சீக்கிய ஜவான்களின் மனங்களிலும் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்திரா காந்தி இந்திய இராணுவத்திலிருந்த சீக்கியர்களினாலேயே கொலை செய்யப்பட்டதானது, இந்திய இராணுவத்தினுள் சீக்கியர்கள் தொடர்பாக அதுவரை இருந்து வந்த நம்பிக்கையை சிதறடித்திருந்தது.

இராணுவத்தினுள் நம்பிக்கையான பொறுப்புக்கள் சீக்கியர்களுக்கு வழங்கப்படுவது தவிர்க்கப்பட்டு வந்தது. இதுவும் சீக்கிய இனத்தவரை இந்தியா என்ற உணர்வில் இருந்து அன்னியப்பட வைப்பதாகவே அமைந்திருந்தது.

இப்படியான நிலையில், இலங்கையில் இராணுவ நடவடிக்கை என்று வந்ததும் இந்தியத் தலைமை அவசர அவசரமாக சீக்கியர்களை அதில் முழுமையாக ஈடுபடுத்தி, சீக்கியப் படைவீரர்களிடையே வேறு சித்தனைச் சிதறல்கள் ஏற்பட்டுவிடுவதை தவிர்ப்பதற்கு யோசித்தார்கள்.

indra gandhi srilanka

அவர்களுக்கு தமது நாட்டுப் பற்றை மற்றுமொருமுறை நிரூபிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்குவது போன்ற ஒருநிலைமையைத் தோற்றுவித்துவிட்டு, இந்தியப் படையினரை ஏதோ ஒரு காரியத்தில் ஈடுபட வைக்கும் மனோவியல் நடவடிக்கையை இந்தியப் படைத்துறைத் தலைமை மேற்கொண்டிருந்தது.

ஈழ யுத்தத்தில் சீக்கியப் படைஅணிகள் அதிக அளவில் ஈடுபட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.

அதேவேளை, இந்தியா-சீக்கியர்கள்-தமிழர்கள் என்ற விடயங்களில் மறைக்கப்பட்ட உண்மை ஒன்றும் உள்ளது.

ஈழயுத்தத்தில் முன்நிலைப்படுத்துப்பட்டு களமிறக்கப்பட்ட சீக்கியப் படையினர் மக்கள் மீது, அதுவும் குறிப்பாக தமிழ் மக்கள் மீது அளவுக்கதிகமாக காழ்ப்புணர்வு கொண்டு செயற்பட்டதற்கு மற்றொரு காரணம் உண்டு. சரித்திர ஆராய்சியாளர்களால் கணக்கில் எடுக்கப்படாததும், அதேவேளை மிகவும் முக்கியத்தவம் பெற்றதுமான இந்தக் காரணம் பற்றி அடுத்த வாரம் சற்று விரிவாகப் பார்ப்போம்.

தொடரும்…

பீ.பீ.சி எழுப்பிய சந்தேகம்!

பீ.பீ.சி எழுப்பிய சந்தேகம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

10 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Cheam, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

இணுவில், New Malden, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், தெஹிவளை

12 Jan, 2004
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், சுன்னாகம், London, United Kingdom

09 Jan, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, டென்மார்க், Denmark, Milton Keynes, United Kingdom

10 Jan, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022