திருமண நாளன்று பரிசு தராத கணவன் : மனைவி கொலைவெறி தாக்குதல்
திருமண நாளன்று பரிசு எதனையும் தராத கணவன் நள்ளிரவில் தூக்கத்தில் இருந்தவேளை மனைவி கத்தியால் குத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவின் பெங்களூரில் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்தியாவின் பெங்களுரிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் கிரண். இவரது மனைவி சந்தியா (வயது35).
மனைவிக்கு பரிசு வாங்கித் தராததால்
அண்மையில் இவர்களுக்கு திருமண நாள் வந்துள்ளது. அந்நாளில் மனைவிக்கு கிரண் பரிசு வாங்கித் தராததால் ஆத்திரமடைந்த சந்தியா கணவன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். மேலும் இதுதொடர்பாக இருவருக்கும் இடையே சண்டையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 1.30 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த கணவன் கிரணை கத்தியால் ஆத்திரத்தில் குத்தியுள்ளார் மனைவி சந்தியா.
மனைவி காவல்துறையினரால் கைது
இந்தநிலையில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒரு தனியார் வைத்தியசாலையில் கிரணை சேர்த்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு வைத்தியசாலை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில் மனைவி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |