பிரதமர் பதவியை நிராகரித்த விஜேதாச ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமக்கு பிரதமர் பதவியை வழங்க முன்வந்த போதிலும் அதனை தாம் நிராகரித்து விட்டதாக முன்னாள் நீதி அமைச்சரும் ஜனாதிபதி வேட்பாளருமான விஜேதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் (Anuradhapuram) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதிக்கு அழுத்தம்
நாட்டில் அரகலய போராட்டம் நடந்தபோது, இந்த நாட்டை அமைதிப்படுத்தி நாட்டை கட்டியெழுப்புவதற்காக அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) 2022 மே மாதம் 12 திகதி ஒரு தீர்மானத்தை எடுத்து அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்குமாறு எனக்கு அழைப்பு விடுத்தார்.
என்றாலும், அதனை அறிந்த பொதுஜன பெரமுன கட்சியினர் (Sri Lanka Podujana Peramuna) குழப்பமடைந்து ரணில் விக்ரமசிங்கவை அவசரமாக அழைத்து வந்து ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததால் அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது.
நான் பிரதமராகும் வாய்ப்பை பொதுஜன பெரமுனவே இல்லாமல் செய்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |