தமிழ் கட்சிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ள விஜயதாச! தேர்தலை முன்னிட்டு நகர்வு

SLFP Dr Wijeyadasa Rajapakshe Eastern Province Northern Province of Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Eunice Ruth Jun 23, 2024 03:34 PM GMT
Report

வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தரப்புக்களுடன் விரைவில் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார். 

இலங்கையில் (Sri Lanka) நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் தொடர்பில் ஏற்கனவே தமிழ் மக்களுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ள பின்னணியிலேயே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி எனும் அடையாளம் கிடைக்காவிட்டாலும் எதிர்வரும் அதிபர் தேர்தலில் தான் நிச்சயம் போட்டியிடுவதாக அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

தேசியப் பிரச்சினை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசியப் பிரச்சினை தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மக்களும், தென்னிலங்கை மக்களும் ஏற்றுக் கொள்ளும் தீர்வு காணப்பட வேண்டும்.

தமிழ் கட்சிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ள விஜயதாச! தேர்தலை முன்னிட்டு நகர்வு | Wijeyadasa Begin Talks With Tamil Parties Election

சிறிலங்கன் எயார்லைன்ஸின் மற்றுமொரு சேவை ஆரம்பம்!

சிறிலங்கன் எயார்லைன்ஸின் மற்றுமொரு சேவை ஆரம்பம்!

தேர்தல் அரசியலை மையப்படுத்தி வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் இனவாதத்தினை உயர்த்துவதன் மூலம் நன்மைகளை அடைவதற்கு எதிர்காலத்திலும் இடமளிக்க முடியாது.

இந்த அரசியல் கலாச்சாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

வழக்குத் தாக்கல் 

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் பதவியை ஏற்றமைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ள விஜயதாச! தேர்தலை முன்னிட்டு நகர்வு | Wijeyadasa Begin Talks With Tamil Parties Election

முறிவடைந்தது ரணில் பசில் பேச்சு

முறிவடைந்தது ரணில் பசில் பேச்சு

குறித்த விடயத்தினை நீதிமன்றத்தின் ஊடாக நிறைவுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

சுதந்திரக் கட்சியின் பெயர்ப்பலகையை மட்டும் சிலர் வைத்திருகின்றார்கள். ஆனால் சிறிலங்கா சுதந்திரக்கட்சி என்ற பேருந்து எனது கையில் தான் உள்ளது.

ஆகவே, அந்தக் கட்சியின் வழக்கு விவகாரங்கள் எமது பயணத்தினை தடுத்து நிறுத்தி விடமுடியாது.

அதிபர் தேர்தல்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயமானது. வழக்கு விவகாரங்கள் நிறைவடைந்தால் அந்த கட்சியின் ஊடாகப் போட்டியிடுவோம்.

தமிழ் கட்சிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ள விஜயதாச! தேர்தலை முன்னிட்டு நகர்வு | Wijeyadasa Begin Talks With Tamil Parties Election

வங்குரோத்திலிருந்து மீண்ட பின்னரே அதிபர் தேர்தல்: ரணிலின் அறிவிப்பு

வங்குரோத்திலிருந்து மீண்ட பின்னரே அதிபர் தேர்தல்: ரணிலின் அறிவிப்பு

இல்லையென்றாலும் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயமானது. அதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை.

தேர்தல்கள் காலத்தில் உணர்ச்சிகரமான பேச்சுக்களைப் பேசி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொள்ளும் கலாசாரத்தினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்ற முறைமை மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டே எதிர்வரும் அதிபர் தேர்லில் போட்டியிடுவதற்கு தீர்மானித்தேன்” என தெரிவித்துள்ளார். 

சரத்பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : ரஞ்சித் மத்துமபண்டார சுட்டிக்காட்டு

சரத்பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : ரஞ்சித் மத்துமபண்டார சுட்டிக்காட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025