காட்டு யானையின் தாக்குதலில் மயிரிழையில் தப்பிய வெளிநாட்டு தம்பதி
Sri Lanka Tourism
Sri Lanka
Elephant
By Sumithiran
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இத்தாலிய தம்பதிகளை ஏற்றிச் சென்ற காரை ரந்தெனிகல பினிகல பகுதியில் வைத்து காட்டு யானை தாக்கி, கவிழ்த்துள்ளதாக கீர்த்திபண்டாரபுர காவல்துறையினர் தெரிவித்தனர்.
காட்டு யானை தாக்கியதில் கார் சேதமடைந்துள்ளதாகவும், ஆனால் அதில் பயணித்த இத்தாலிய தம்பதிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அப்பகுதியின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யானை - கார் மீது தாக்குதல்
எல்ல பிரதேசத்தில் இருந்து கண்டி நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்த போது காட்டு யானை ஒன்று வீதியைக் கடப்பதைக் கண்டு காரை நிறுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போதே குறித்த யானை கார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

