இளைஞர் மீது சரமாரி தாக்குதல்..! வனஜீவராசிகள் உத்தியோகத்தர்கள் கொடூரம் - ஒருவர் கைது

Mullaitivu Sri Lanka Sri Lankan Peoples
By Kiruththikan Dec 04, 2022 03:59 AM GMT
Report

தாக்குதல்

சிவில் உடையில் வந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் உத்தியோகத்தர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த இளைஞர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை உத்தியோகத்தர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மைய நாட்களாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மற்றும் அதற்கு பயன்படுத்தும் ஆயுதங்கள் வைத்திருப்பவர்களை கைது செய்துவந்துள்ளனர்.

அந்தவகையில் நேற்று(03) மாலை மாங்குளம் துணுக்காய் வீதியில் மாங்குளம் நகருக்கு அண்மையில் வீதியில் சென்ற இளைஞரை மறித்த சிவில் உடையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இளைஞரை சோதனை செய்ய முற்ப்பட்டுள்ளனர்.

கைகலப்பாக மாறிய வாக்குவாதம்

இளைஞர் மீது சரமாரி தாக்குதல்..! வனஜீவராசிகள் உத்தியோகத்தர்கள் கொடூரம் - ஒருவர் கைது | Wildlife Officials Attacked Jaffna

இதன்போது நீங்கள் யார் என்று வினவி அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரிய போது அடையாள அட்டை காண்பிக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவிக்கின்றார்

இதனை தொடர்ந்து அந்த இடத்திற்கு வந்த இளைஞரின் அண்ணா அதிகாரிகளிடம் அடையாள அட்டை காண்பிக்குமாறு முரண்பட்ட வேளை சிவில் உடையில் இருந்த ஒருவர் சிவில் பாதுகாப்பு திணைக்கள அடையாள அட்டையை காண்பித்துள்ளார்.

இதன்போது சிவில் உடையில் வீதியால் செல்பவர்களை மறித்து சோதனையிட உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது என்ற வாக்குவாதம் இடம்பெற்று அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது சிவில் உடையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தன்மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட இளைஞர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இளைஞரின் சகோதரன் கைது

இளைஞர் மீது சரமாரி தாக்குதல்..! வனஜீவராசிகள் உத்தியோகத்தர்கள் கொடூரம் - ஒருவர் கைது | Wildlife Officials Attacked Jaffna

இதன்போது சம்பவ இடத்திற்கு மாங்குளம் காவல்துறையினர் அழைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட போது அதிகாரிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினருக்கு தெரிவித்த நிலையில் காயமடைந்த இளைஞரின் சகோதரனை காவல் நிலையம் அழைத்து சென்ற காவல்துறையினர், அதிகாரிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்து இளைஞனை கைது செய்துள்ளனர்.

காவல்துறையினரின் முறைப்பாட்டின் பின்னர் இரண்டு அதிகாரிகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வதற்கான பத்திரங்களை பெற்று வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர் இந்நிலையில் இந்த இந்த செயற்ப்பாடு மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ( இரானுப்பிரிவை சேர்ந்தவர்) சிவில் நிர்வாகம் நடைமுறையில் உள்ள போது எவ்வாறு மக்களை சோதனையிட முடியும் மற்றும் சீருடை அணியாது சிவில் உடையில் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட முடியுமா எனவும் இவ்வாறு சிவில் உடையில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் செயற்பட்டமைக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ள அதேவேளை வனஜீவராசிகள் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் வந்தால் அவர்கள் தங்களை அடையாளப்படுத்தி செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் அல்லது அவர்களுடைய சீருடையில் வருகைதர வேண்டும் இவ்வாறு சிவில் உடையில் வந்து வீதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்கள் இளைஞர்களுடன் முரண்பட்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை செய்ய கூடாது எனவும் இவ்வாறு பொறுப்பற்ற தனமாக கடமையாற்றும் அதிகாரிகள் மீது திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

உரிய அடையாளப்படுத்தலுடன் கடமை

இளைஞர் மீது சரமாரி தாக்குதல்..! வனஜீவராசிகள் உத்தியோகத்தர்கள் கொடூரம் - ஒருவர் கைது | Wildlife Officials Attacked Jaffna

இதேவேளை இரண்டு தினங்களுக்கு முன்னர் மாங்குளம் கற்குவாறி பகுதியில் சிவில் உடையில் குறிப்பாக ஒருவர் (ஜம்பர்)கட்டைகாற்சட்டையுடனும் ஏனையவர்கள் சிவில் உடையில் ஒருவர் கூட திணைக்கள சீருடை அணியாத நிலையில் கணவன் வீட்டில் இல்லாத நிலையில் மனைவி மற்றும் பிள்ளைகள் இருந்த வீட்டில் சென்று வீடுமுழுவதும் சோதனை செய்துள்ளனர் இந்த செயற்பாடும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையில் பொதுமக்கள் வனஜீவராசிகள் திணைக்கள உயர் அதிகாரிகளிடம் தங்களது பணியாளர்களை உரிய அடையாளப்படுத்தலுடன் கடமைகளில் ஈடுபட பணிக்குமாறும் பல்வேறு இடங்களில் திருடர்களும் பொய்களை கூறி வீடுகளுக்குள் சென்று திருடிய சம்பவங்களும் பதிவாகியுள்ளது எனவும் இவ்வாறு அச்சு சூழலில் மக்கள் உள்ளபோது உங்கள் அதிகாரிகள் இவ்வாறு உரிய அடையாளப்படுத்தல் இல்லாமல் செயற்ப்படுவதை தடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்

ReeCha
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி