மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிவரும் - விசேட வைத்திய நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை
கொரோனா தொற்று பரவல் நாட்டில் அதிகரித்துள்ளது . இதனால் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பேணிவருவதற்கு தவறினால் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன (Asela Gunawardena)கூறியுள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதிகமானவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தாலும் அதனை முறையாக அணிவதில்லை.
குறிப்பாக திருமண நிகழ்வுக்களுக்கு அனுமதி வழங்கி, அதில் ஒன்றுகூடுவதற்கு 100 முதல் 150 பேருக்கு தற்போது அனுமதி வழங்கி இருக்கின்றோம். கொரோனா தொற்று எமது நாட்டில் இருந்தும் உலகில் இருந்தும் இன்னும் பூரணமாக நீங்கவில்லை.
அதனால் மக்கள் மிகவும் அவதானமாகவே தங்கள் செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்.
மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவதற்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டிவரும். அதற்காக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிவரும். என்பதை மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என அசேல குணவர்த்தன(Asela Gunawardena) கூறியுள்ளார்.