முன்னாள் அமைச்சர் எடுத்த முடிவு - கோட்டாபயவுக்கு சென்றது கடிதம்
bandula gunawardena
letter
gotabaya
minister post
By Sumithiran
அடுத்த சில தினங்களில் நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில் தான் அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்காக இளையவர்கள் அடங்கிய அமைச்சரவையை நியமிக்குமாறும், அவர்களுக்கு இடமளிக்கும் வகையில் தான் அமைச்சரவையின் பொறுப்புகளை ஏற்கப் போவதில்லை என பந்துல குணவர்தன, அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
குறுகிய காலத்திற்கு 15 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்குமாறும் நெருக்கடி தீர்ந்த பின்னர், அமைச்சரவைக்கு மேலும் சிலரை நியமிக்க முடியும் எனவும் அவர் யோசனை முன்வைத்துள்ளார்.
அத்துடன் குறுகிய காலத்தில் செய்ய வேண்டிய பல மாற்றங்கள் தொடர்பான யோசனைகளையும் பந்துல, அனுப்பியுள்ள கடிதத்தில் முன் வைத்துள்ளார்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி