ரயிலில் பயணம் செய்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்
Dilum Amunugama
not change
train fees
By Sumithiran
எரிபொருள் விலையேற்றம் காரணமாக பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட்டாலும் தற்போதைக்கு ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம(Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலைகள் அதிகரித்து மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கும் இவ்வேளையில் ரயில் கட்டணத்தில் திடீர் திருத்தத்தை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எரிபொருள் கட்டண அதிகரிப்பால் பேருந்து சங்கங்கள் பஸ் கட்டணத்தை 17% அதிகரிக்க வேண்டியிருந்தாலும் எக்காரணம் கொண்டும் புகையிரத கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி