ஒபரேஷன் சாகர்பந்து 2.0 இலங்கையை கட்டியெழுப்பும்!
டித்வா சூறாவளியால் சுருட்டப்பட்ட இலங்கை மீண்டும் வழமைக்குத் திரும்ப முனைகின்றது.
இலங்கையை சுற்றியுள்ள கடல் பரப்புக்கு கடந்த சிலநாட்களாக விதிக்கபட்ட கடற்றொழிற்தடை இப்போது முடிவுக்கு வந்ததால் கடல் சற்று வழமைக்குத் திரும்புகிறது.
ஆனால் தரைப்பகுதியில் டித்வா ஏற்படுத்திய பேரவலத்தால் நாடு தொடர்ந்தும் அவலநிலையில் உள்ளது.
உயிர்ப்பலிகளின் அதிகாரபூர்வ எண்ணிக்கை இன்று 400 கடந்து உயர்ந்து வருகிறது. 300 மேற்பட்ட மக்களின் கதி இன்னமும் தெரியவில்லை.
வெள்ளம் வடிந்தோடிய பின்னர் நீர்வழியால் தொற்றக்கூடிய நோய்கள் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொழும்பு உட்பட முக்கிய நகரங்களில் மக்கள் உணவுத்தட்டுப்பாடு குறித்த அச்சத்தால் பொருட்களை அதிகம் கொள்வனவு செய்வதால் பல கடை அலமாரிகள் வெறுமையாகியுள்ளன.
உலக நிவாரணக் குழுக்கள் தற்போது களத்தில் உள்ளன. இந்திய பாகிஸ்தானிய மீட்புக் குழுக்களுக்கு மேலதிகமாக ஜப்பான் பேரிடர் நிவாரணக் குழுவும் இலங்கைக்கு செல்கிறது.
இதற்கிடையே இலங்கையில் ஒரே நேரத்தில் எதிரி நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் நிவாரணப் பணியில் நிற்பதால் இந்திய வான்வெளி குறித்த ஒரு சடுதியான முறுகல் எழுந்துள்ளது.
நேற்று சிறிலங்கா அரச தலைசர் அனுரகுமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது தற்போதைய ஒபரேஷன் சாகர்பந்து தொடரும் என்ற உறுதியை வழங்கியுள்ள நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது இன்றைய செய்தி வீச்சு…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |