உயர்தர, புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா?
parliament
susil premajayantha
al exam
By Jaso
தனது கருத்துப்படி உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படவேண்டுமெனவும் கல்வி அமைச்சும், பரீட்சைகள் திணைக்களமும் எதிர்காலத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறுவதற்கான திகதிகளை தெளிவுபடுத்தும் என்றும் கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூர கல்வி ஊக்குவிப்பு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, (Susil Premajayantha)தெரிவித்தார்.
இன்று (05) நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார (Santa Bandara) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த பரீட்சைகளை ஒத்திவைக்க பல கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும், அதன்படி அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.