பாலின் விலையும் அதிகரிக்குமா?
price
increase
milk
By Sumithiran
உள்ளூர் பால்மா பொதி ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரித்துள்ள நிலையில், ஒரு லீற்றர் பாலின் விலையும் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டுமென கால்நடை வளர்ப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒரு லீற்றர் பாலின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை தானும் ஏற்றுக்கொள்வதாக கால்நடை இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத்(D.P. Herath) தெரிவித்துள்ளார்.
இதேவேளை அண்மைய நாட்களாக கால்நடைகளுக்கான தீவனங்களின் விலைகள் அதிகரித்து செல்வதால் அதற்கேற்ற வகையில் பாலின் விலை அதிகரிக்கப்படவில்லை என கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி