யூரியா இறக்குமதி செய்யப்படுமா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
யூரியாவை இறக்குமதி செய்வதற்கான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன(SM Chandrasena) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று சிறுநீரக நோயாளர்களும் இரசாயன உரங்களுக்காகக் கிளர்ந்தெழுந்து வருவதாகவும் அது ஏன் என்பது தனக்குப் புரியாத புதிராகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.
நாட்டில் பொஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் காணப்படுகின்ற போதிலும் நைட்ரஜனில் பிரச்சினை காணப்படுவதாக சந்திரசேன தெரிவித்தார்.
கரிம உரம் தொடர்பில் அரசதலைவர் நல்லெண்ணத்தின் பேரில் தீர்மானம் எடுத்துள்ளதாகவும், சிறுநீரக நோயாளர்களை நினைத்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அனைவரின் ஆதரவை நாடியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பணி நீக்கம் (சிறப்பு ஆணைகள்) (திருத்தம்) மசோதா, ஓய்வூதியத்திற்கான குறைந்தபட்ச வயது மசோதா, பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கான வேலைவாய்ப்பு சட்டம், நிலம் கையகப்படுத்தும் சட்டம் மீதான விவாதத்தில் அவர் பேசியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.