ஜெனிவா தாளத்துக்கு ஆடும் அநுர அரசு : போட்டு தாக்குகிறார் விமல்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கanura kumara dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே செயற்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச (wimal weerawansa)குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.அந்த நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இடதுசாரி இயக்கம் - பயணம் வேறுவிதம்
‘ தேசிய மக்கள் சக்தியானது தன்னை இடதுசாரி அரசியல் இயக்கமாகவே காட்டிக்கொள்கின்றது. ஆனால் அக்கட்சியினரின் பயணம் வேறு விதமாகவே அமைந்துள்ளது.
குறிப்பாக ஜெனிவாவில் கூறப்படும் அனைத்து விடயங்களும் நிறைவேற்றப்பட்டுவருகின்றன. ஒற்றையாட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படையினரை பலிக்கடாவாக்குவதற்கான சட்டமூலத்தையும் கொண்டுவர முற்படுகின்றனர்.
ஜெனிவா தாளத்துக்கு ஆடும் அரசு
இவ்வாறு ஜெனிவா தாளத்துக்கு அமைய ஆடும் இந்த அரசாங்கத்தை எப்படி இடதுசாரி அரசாங்கம் என சொல்வது?” – எனவும் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
