தேங்காய் எண்ணெய் விவகாரம்! பின்புலத்தில் இருப்பவர்களை கண்டுபிடித்தார் விமல்!
தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோயை ஏற்படுத்தும் மூலக்கூறுகள் உள்ளதாக பரப்பப்படும் செய்திகளின் பின்புலத்தில் பாம் ஒயில் வர்த்தகர்களே இருப்பதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவித்ததாவது, புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய்யை சந்தைக்கு கொண்டுவந்துள்ளதாக சிலர் விமர்சிக்கின்றனர்.
புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய்க்கு முதல் புற்றுநோயை ஏற்படுத்தும் பாம் ஒயிலே சந்தையில் இருந்தது. மரக்கறி எண்ணெய் என நாம் உண்பது புற்றுநோயைதான்.
அந்த எண்ணெயில் எவ்வித மரக்கறிகளும் இல்லை. கடந்த காலத்தில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி எமது நாட்டில் வீழச்சிகண்டது. அதற்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்வது கனவாக மாறியது.
அதனால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. 1977ஆம் ஆண்டு திறந்த பொருளாதார அறிமுகத்தின் பின்னர் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு எண்ணெய்களை இறக்குமதி செய்து எமது பிள்ளைகளுக்கு ஊட்டினோம்.
இன்று அவர்களை நோயாளிகளாக மாற்றியுள்ளோம். பாம் ஒயிலுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடையின் காரணமாகவே புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் குறித்து பேசுகின்றனர்.
இதன் பின்புலத்தில் உண்மையாக இருப்பது பாம் ஒயில் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும்தான் என்றார்.