கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்ப்பு : மகளின் மரணம் குறித்து தாயார் அதிர்ச்சி வாக்குமூலம்

Colombo Sri Lanka Police Investigation Child Abuse School Children
By Sathangani May 23, 2025 05:30 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் ஆறாவது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட பாடசாலை மாணவி அம்ஷியின் தாயார் மகளின் மரணம் குறித்து வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

பம்பலப்பிட்டி கல்லூரியின் கணித ஆசிரியரின் துன்புறுத்தல் மற்றும் தனியார் கல்விநிறுவன உரிமையாளரின் அவமதிப்பினால் மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல், தனது மகள் அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தான் நம்புவதாக தாயார் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (22) கொழும்பு மேலதிக நீதவான் மபாத் ஜெயவர்தன முன் முன்னிலையாகி மகளின் மரணம் தொடர்பாக வாக்குமூலம் வழங்கிய போது இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரபாகரனுக்கு சிலை வைக்கும் நடவடிக்கை : அநுர தரப்பு விளக்கம்

பிரபாகரனுக்கு சிலை வைக்கும் நடவடிக்கை : அநுர தரப்பு விளக்கம்

காவல்துறையில் முறைப்பாடு

காவல்துறை அதிகாரி : "தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் உங்கள் மகளைத் திட்டுவது மற்றும் பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகிப்பது குறித்து காவல்துறையில் முறைப்பாடு அளித்தீர்களா?

தாய் : நான் முறைப்பாடு செய்யவில்லை.

கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்ப்பு : மகளின் மரணம் குறித்து தாயார் அதிர்ச்சி வாக்குமூலம் | Colombo School Girl Died Mother Statement In Court

காவல்துறை அதிகாரி : உங்கள் மகள் இதற்கு முன் தற்கொலைக்கு முயன்றிருக்கிறாரா?

தாய் : ஆமாம், அவள் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றாள். ஒரு முறை அவள், அளவுக்கு அதிகமாக மருந்து உட்கொண்டாள். மற்றொரு முறை அவள் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாள்.

காவல்துறை அதிகாரி : உங்கள் மகள் மனக் குழப்பத்தால் அவதிப்படுவதால், அவளைத் தனியாக அனுப்ப வேண்டாம் என்று மருத்துவக் குழு உங்களுக்கு அறிவுறுத்தியதா?

தாய் : ஆம், எனக்கும் என் கணவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை அதிகாரி : அப்படி ஒரு அறிவிப்பு இருந்தும், ஏன் அந்த மகளை தனியாக ஒரு தனியார் வகுப்பிற்கு அனுப்பினீர்கள்?

தாய் : அவள் எப்போதும் தன்னைச் சிறைபிடித்து வைத்திருப்பதாகக் கூறுகிறாள். அவளுடைய தனியார் வகுப்பு வீட்டிற்கு அருகில் உள்ளது, அதனால்தான் அவள் அனுப்பப்பட்டாள்.

பிரபாகரனின் உப்பு எதுவும் இல்லை...! சபையில் சுனில் ஹந்துன்நெத்தி எகத்தாளம்

பிரபாகரனின் உப்பு எதுவும் இல்லை...! சபையில் சுனில் ஹந்துன்நெத்தி எகத்தாளம்

நடந்த சம்பவம் 

காவல்துறை அதிகாரி : உங்கள் மகள் தற்கொலை செய்து கொள்ள முன்னர் ஏதாவது நடந்ததா?

தாய் : ஆம், ஒரு சம்பவம் நடந்தது.

காவல்துறை அதிகாரி : என்ன சம்பவம் நடந்தது?

தாய் : ஏப்ரல் 26 ஆம் திகதி மாலை 6 மணியளவில், என் மகள் மேல் தளத்தின் ஏழாவது மாடிக்குச் சென்றாள். நானும் அந்த இடத்திற்குச் சென்றேன். நான் சென்றபோது, என் மகள் பெல்கனியில் ஒரு புத்தகத்தை கையில் வைத்திருந்தாள். புத்தகத்தின் உள்ளே ஒரு பூ இருந்தது. அங்கேதான் மகள் கீழே குதித்தாள்.

கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்ப்பு : மகளின் மரணம் குறித்து தாயார் அதிர்ச்சி வாக்குமூலம் | Colombo School Girl Died Mother Statement In Court

காவல்துறை அதிகாரி : மகளை அங்கே பார்த்த பிறகு நீங்கள் என்ன செய்தீர்கள்?

தாய் : நான் என் மகளிடம் கவலைப்படாதே, மருந்து வாங்கப் போகலாம் என்று சொல்லிட்டு அவளை எங்களுடன் கூட்டிக்கொண்டு போனேன்.

காவல்துறை அதிகாரி : ஏப்ரல் 28 இரவு உங்கள் மகள் யாரிடமாவது 'என்னைக் காப்பாற்றுங்கள்' என்று சொல்வதைக் கேட்டீர்களா?

தாய் : ஆமாம், வீட்டை விட்டு வெளியேற அவள் பிடிவாதமாக இருந்ததால் நாங்கள் கதவை மூடிக்கொண்டிருந்தோம். அந்த நேரத்தில், அவள், 'ஐயோ, செக்கியூரிட்டி அங்கிள், என்னைக் காப்பாற்று!' என்று கத்துவதைக் கேட்டேன்.

யாழில் சிலப்பதிகார விழா ஆரம்பம்

யாழில் சிலப்பதிகார விழா ஆரம்பம்

தந்தையின் சாட்சியம்

காவல்துறை அதிகாரி : ஏப்ரல் 29 அன்று என்ன நடந்தது?

தாய் : என் மகள் ஒரு வகுப்புக்குச் செல்ல வேண்டும் என்று சொன்னாள்.

காவல்துறை அதிகாரி : நீங்கள் என்ன செய்தீர்கள்?

கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்ப்பு : மகளின் மரணம் குறித்து தாயார் அதிர்ச்சி வாக்குமூலம் | Colombo School Girl Died Mother Statement In Court

தாய் : அன்று மதியம் 3:00 மணியளவில் என் மகள் வகுப்பிற்குச் செல்வதாகக் கூறி லிஃப்டில் இறங்கத் தயாராகிக் கொண்டிருந்தாள். அவள் கீழே இறங்குகிறாளா என்று நான் பெல்கனியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவள் கீழே இறங்கி தெருவுக்குள் நுழைவதை நான் பார்க்கவில்லை, அதனால் என் மகள் கீழே செல்லவிருந்த லிஃப்டுக்குச் சென்றேன். அந்த நேரத்தில், வெளியே பெரிய சத்தம் கேட்டது. நான் பெல்கனிக்குச் சென்று கீழே பார்த்தபோது, என் மகள் தெருவில் தரையில் கிடப்பதைக் கண்டேன். என் மகள் ஒரு வாகனத்தில் மோதியிருக்கலாம் என்று நினைத்தேன்.

காவல்துறை அதிகாரி : அடுத்து என்ன நடந்தது?

தாய் : இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்த என் மகளை என் கணவருடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். மருத்துவமனையில், என் மகள் இறந்துவிட்டாள் என்று அறிந்தேன் ” என்றார்.

இவ்வாறாக தாயாரின் சாட்சியம் நேற்று முடிவடைந்த நிலையில், சிறுமியின் தந்தையின் சாட்சியம் இந்த மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆயுள் தண்டனையில் தப்பிய பிள்ளையான்: TMVPயின் இராணுவ பிரிவு - தேடும் புலனாய்வுத் துறை

ஆயுள் தண்டனையில் தப்பிய பிள்ளையான்: TMVPயின் இராணுவ பிரிவு - தேடும் புலனாய்வுத் துறை


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Baden, Switzerland

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Toronto, Canada

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

31 Aug, 2010
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Brampton, Canada

29 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
23ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025