ஏறாவூரில் கூரிய வாள்களுடன் பெண்ணொருவர் கைது!
Sri Lanka Police
Sri Lanka
Law and Order
By Bavan
ஏறாவூரில் பிரதேசத்தில் பெண்ணொருவர் இரு கூரிய வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, குறித்த பெண் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09.11.2025) கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, சம்பவ தினமான நேற்று (09.11.2025) காவல்துறையினர் ஏறாவூர் முதலாம் பிரிவிலுள்ள மையவாடி வீதி மீராகேன் பிரதேசத்திலுள்ள வீடொன்றை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
கூரிய இரு வாள்கள்
இதன்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய இரு வாள்களை மீட்கப்பட்டதுடன் 41 வயதுடைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த பெண்ணின் கணவர் ஏற்கனவே போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்