கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்: காவல்துறையினர் தீவிர விசாரணை
கட்டுநாயக்க விமான நிலையத்தில்(Bandaranaike International Airport) வைத்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 35 இலட்சத்து 86 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண் ஒருவர் செய்யப்பட்டுள்ளார்.
பொல்கஹவெல, பொத்துஹெர பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவரே இன்று (7) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த பெண் இன்று (7) வெள்ளிக்கிழமை காலை 07.55 மணியளவில் துபாயிலிருந்து(Dubai) விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவரின் பயணப்பொதிகளிலிருந்து 35,860 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவரது கணவர் துபாயில் வசிப்பதாகவும், இவர் இதற்கு முன்னர் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் காவல்துறையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவரை எதிர்வரும் 12 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |