டெல்லியில் பொது வெளியில் தாய் மற்றும் மகள் மீது கொடூர தாக்குதல் -(வீடியோ இணைப்பு)
தாய் மற்றும் அவரின் மகள் ஆகியோரை வீதியில் வைத்து இரும்பு குழாய்களை கொண்டு சிலர் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த நவம்பர் 19ஆம் திகதி இரவு சுமார் 10 மணியளவில், டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில், இரு பெண்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் சேர்ந்து 38 வயது பெண் மற்றும் அவரின் மகள் மீது இரும்பு கம்பி மற்றும் கட்டைகளைக் கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகாமையில் உள்ள வீட்டின் கண்காணிப்பு கமராவில் இந்த காட்சிகள் பதிவாகியிருந்தது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த வீடியோவில் தாக்குதலுக்கு ஆளான தாய் - மகள் இருவரும் தங்களின் குடியிருப்புப் பகுதியின் பார்க்கிங்கில் காரை நிறுத்தியுள்ளனர். முதலில் அப்பெண்ணின் மகள் காரை விட்டு வெளியே இறங்கிய போது, அங்கு வந்த இரு பெண்கள் மகளை அடித்து உதைத்தனர். இதனைப் பார்த்து காரை விட்டு இறங்கிய தாயையும் அப்பெண்கள் தாக்கத் தொடங்கினர்.
இந்த சமயத்தின் அங்கு மேலும் சில இளைஞர்கள் கையில் இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டைகளுடன் வந்து தாய், மகள் இருவரையும் கடுமையாக தாக்கத் தொடங்கினர். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த தாய், காரின் பக்கவாட்டில் சரிந்து விழுகிறார். இதன் பின்னர் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
#WATCH | A group of persons beat up a woman with sticks in a residential colony in Shalimar Bagh area of Delhi on November 19
— ANI (@ANI) December 1, 2021
Based on the woman's complaint, Delhi Police has registered an FIR against unknown persons, it said.
(CCTV footage of the incident) pic.twitter.com/YmZRtD7COu