குளவிக்கொட்டுக்கு இலக்காகி குடும்பப் பெண் உயிரிழப்பு
மஸ்கெலியாவில் (Maskeliya) குளவிக் கொட்டுக்கு இலக்கான குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிவகுமார் அந்தோனி டெரிண்டா (வயது 44) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த பெண் கடந்த 19 ஆம் திகதி மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கத்தின் தோட்ட கிலன்டில் பிரிவில் பணிபுரிந்து கொண்டு இருந்த வேளையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
உயிரிழப்பு
இந்த நிலையில், உயிரிழந்த பெண் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, அவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (24) உயிரிழந்தார் என மஸ்கெலியா காவல் நிலையப் பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |