கொழும்பில் இந்து ஆலயமொன்றில் தீ மிதிப்பில் கலந்து கொண்ட பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
கொழும்பில் இந்து ஆலயமொன்றில் தீ மிதிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பெண்ணொருவர் பரிதாகபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
கொழும்பு ஆமர் வீதியில் உள்ள இந்து ஆலயமொன்றில் கடந்த 14ம் திகதி தீமிதிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான பெண்ணும் கலந்துகொண்டுள்ளார்.
இதன்போது அவருக்கு காலில் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.காயங்கள் ஏற்பட்டநிலையில் அவர் தனது வீட்டிலேயே இருந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
குறித்த பெண்ணின் நிலைமை கவலைக்கிடமானதை அடுத்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி கடந்த 18ம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என ஆமர்வீதி காவல்துறையினர் தெரிவித்தனர்.