யாழில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு!
யாழில் (Jaffna), பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.
மூத்தநயினார் கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என்ற முகவரியைச் சேர்ந்த துஷ்யந்தன் நிரோஷா (வயது 37) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சத்திரசிகிச்சை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு பித்தப்பை கல் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்காக கடந்த 22 ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் 23 ஆம் திகதி பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த பெண் சிலமணி நேரங்களில் மயக்கமடைந்துள்ளார்.
மரண விசாரணை
பின்னர் 25 ஆம் திகதி காலை, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று (27) காலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
