திருமண உடையில் வந்து ஆசிரிய நியமனத்தை ஏற்ற மணமகள்
Hambantota
Lakshman Yapa Abeywardena
By Sumithiran
ஹம்பாந்தோட்டை(Hambantota) மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான அரச நியமனம் வழங்கும் நிகழ்வின் போது இடம்பெற்ற தனித்துவமான நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்தது.
இதன்படி இன்று(30) திருமண பந்தத்திற்கு தயாரான யுவதி ஒருவருக்கும் ஆசிரியர் நியமனம் கிடைத்துள்ளது.
திருமண கோலத்தில் வந்து
அம்பலாந்தோட்டை(Ambalantota) பிரதேசத்தை சேர்ந்த திலினி (Dilini) என்ற மணமகளுக்கே ஆசிரியர் நியமனம் கிடைத்தது.
இதன்படி அவர் திருமண கோலத்தில் வந்து தனது ஆசிரிய நியமனத்திற்கான கடிதத்தை பெற்றுச் சென்றார்.
தென் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன(Lakshman Yapa Abeywardena) தலைமையில் இந்த நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்