பெருந்தொகையான போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது!
புறக்கோட்டை - பஞ்சிகாவத்தை பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த பெண் ஒருவர் புறக்கோட்டை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புறக்கோட்டை காவல் நிலைய அதிகாரிகள் குழுவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண், புறக்கோட்டை - பஞ்சிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
6 கையடக்க தொலைபேசிகள் மீட்பு
சந்தேக நபரிடமிருந்து 710 கிராம் ஐஸ் போதைப்பொருள், 934 கிராம் ஹெரொயின், 300 கிராம் ஹஷிஷ், 300 போதை மாத்திரைகள், ஒரு மின்னணு தராசு, பணம் எண்ணும் இயந்திரம், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக நம்பப்படும் ரூ. 8,59,730 பணம் மற்றும் 6 கையடக்க தொலைபேசிகளும் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேக நபர் இன்று (28.03.2026) மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ள நிலையில் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புறக்கோட்டை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்