"ஐஸ்" கொடுத்து மசாஜ் செய்த பெண் கைது
கண்டியில் உள்ள தேவான ராஜசிங்க மாவத்தையில் மசாஜ் நிலையம் நடத்தி , ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒரு பெண் மற்றும் மற்றொரு நபர் கண்டி போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மற்றொரு நபர் அந்தப் பெண்ணுக்கு ஐஸ் வழங்குபவர் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைபேசியில் உள்ள தகவல்கள் கண்டுபிடிப்பு
இஷாரா என்ற நபர் துபாயில் இருந்து இந்த வர்த்தகத்தை நடத்தி வருவது தெரியவந்துள்ளது, மேலும் கைது செய்யப்பட்ட நபர்களின் கைபேசி தரவுகளைப் பயன்படுத்தி காவல்துறையினர் மேலும் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் 05 கிராம் ஐஸ் வைத்திருந்தார், மற்றொரு நபர் 10 கிராம் வைத்திருந்தார்.
மசாஜ் செய்வதற்காக வரும் நபர்களுக்கு ஐஸ் விற்பனை
குறித்த பெண் மசாஜ் செய்வதற்காக வரும் நபர்களுக்கு ஐஸ் விற்பனை செய்து வந்ததாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கண்டி காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
