பண்டாரவளையில் பெண் ஒருவர் குத்திக் கொலை
Sri Lanka Police Investigation
By Vanan
பண்டாரவளையில் உள்ள விடுதி ஒன்றில் 40 வயதுடைய பெண் ஒருவர் இன்று (24) பிற்பகல் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பதுளை அட்டாம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விஷம் செலுத்தப்பட்டதற்கான தடயங்கள்

அவரது உடலில் விஷம் செலுத்தப்பட்டதற்கான தடயங்கள் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று காலை விடுதிக்கு வந்த சில மணி நேரங்களில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளதாக பண்டாரவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.