பண்டாரவளை கொலை விவகாரம் - சந்தேக நபர் கைது!
Colombo
Sri Lanka
By pavan
பண்டாரவளையில் பெண்ணொருவரை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில், சிகிச்சைபெற்று வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டு, இன்று அதிகாலை பண்டாரவளை காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை – எட்டாம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 23 ஆம் திகதி கொலைசெய்யப்பட்டிருந்தார்.
மேலதிக விசாரணை

இந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.