தனியாக வசித்து வந்த பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு
அஹுங்கல்ல, எகொடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணை பல நாட்களாக காணவில்லை எனவும் அவர் தங்கியிருந்த வீட்டின் திசையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அஹுங்கல்ல காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாற்காலியில் சடலமாக மீட்பு
இதற்கமைய நேற்று (19) காவல்துறையினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது, அந்த வீட்டில் வசிக்கும் பெண் வீட்டினுள் உள்ள நாற்காலியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த பெண்ணின் உடல் மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் அஹுங்கல்ல, எகொடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening